சதுரகிரியில் ஐப்பசி பவுர்ணமி வழிபாடு; அக்.26 முதல் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2023 09:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு அக். 26 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி பிரதோஷ நாளான அக். 26ல் துவங்கி 27, 28, 29 ஆகிய தேதிகளில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராத விதமாக கன மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என சாப்டூர் வனசரகர் செல்வமணி தெரிவித்தார்.