மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2023 09:10
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவலில் கடந்த 15ம் தேதி துவங்கி நவராத்திரி விழா நடந்து வந்தது. இதை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்தனர். உற்சவம் அங்காளம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்தனர். இதன் படி முதல் நாள் விழாவில் அங்காளம்மன் அலங்காரத்திலும், இரண்டாம் நாள் பால திரிபுர சுந்தரி அலங்காரமும், மூன்றாம் நாள் கன்னியாகுமரி அம்ம்ன் அலங்காரமும், 4ம் நாள் மகாலட்சுமி அலங்காரமும், 5ம் நாள் கோமதி அம்மன் அலங்காரமும், 6ம் நாள் கற்பகாம்பாள் அலங்காரமும், 7ம் நாள் சம்மோஷினி அலங்காரமும், 8ம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 9ம் நாள் சரஸ்வதி அலங்காரமும், 10ம் நாள் விழாவின் நிறைவாக விஜயசாமுண்டீஸ்வரி அலங்காரமும் செய்திருந்தனர். இன்று மாலை சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.