அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பாலாலயம்; முதல் கால யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 12:10
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், பாலாலயத்திற்கான முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2024 ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான மராமத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (26.10.2023) அவிநாசி லிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன், சுப்பிரமணியர், நவகிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கும், கற்சிலா விக்ரகங்கள் மற்றும் உலோக உற்சவ விக்கிரகங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கால யாக பாலாலய பூஜை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் நடைபெறுகின்றது. இதற்காக நேற்று முதல் கால யாக வேள்வியில் வாஸ்து சாந்தி, கலா கர்சனம், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன்,தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர் கோவில் செயல் அலுவலர் செந்தில், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.