பதிவு செய்த நாள்
26
அக்
2023
01:10
கருமத்தம்பட்டி: உலக நன்மை வேண்டி, 45 நாட்கள் நடக்கும் சண்டி யாகம், நேற்று முன்தினம் துவங்கியது.
ஜெய்ஹிந்த் பாரத பண்பாடு கலாசார அறக்கட்டளை சார்பில், அரசூர் அடுத்துள்ள ஊத்துப்பாளையத்தில் உலக நன்மை வேண்டி, சஹஸ்ர சண்டி யாகம் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காப்பு கட்டுதல், கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனனர். வரும் டிச., 7 வரை, 45 நாட்கள் யாகம் நடக்கிறது. கணபதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சுதர்சன ஹோமம், அதி ருத்ர மகா ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் நடக்கிறது. தினமும் காலை, மாலை என, இரு வேளைகளில் ஹோமங்கள் நடக்கின்றன. மடாதிபதிகள், ஆதின கர்த்தர்கள், நாகா சாதுக்கள் பலர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.