பாலமேடு: பாலமேட்டில் 500 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தின் வருஷாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆண்டு நவ.,12 இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள், கணபதி ஹோமம் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.