சித்த லிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 11:11
கோவை; ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருக்கும் சித்த லிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் மூன்றாவது திங்கட்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.