திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி 160 கி.மீ., பாதயாத்திரை சென்று இளைஞர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 11:11
கர்நாடகா; கர்நாடகா, கோடஹள்ளிளை சேர்ந்த இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். பின் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
மேட்டூர் அடுத்த, கர்நாடகா மாநிலம், ஸ்ரீமலையில் மாதேஸ்வரன் சுவாமி கோவில் உள்ளது. பக்தர்களின் குறை தீர்க்கும் தலமாக அமைந்துள்ளது இக்கோவில். இங்கு வழிபாடு செய்தால் உடனடியாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு தங்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கர்நாடகா கோடஹள்ளிளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 160 கி.மீ., பாதயாத்திரையாக சென்று சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.