நபிகள் நாயகம் மெதினாவில் இருந்தபோது முஸ்லிம் ஒருவருக்கும், யூதர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் முஸ்லிம், ‘‘எங்கள் நபிகள் நாயகத்திற்குதான் இறைவன் மேன்மை அளித்துள்ளான்’’ என வாதிட்டார். யூதரோ தனது கருத்தை அடிக்கோடிட்டு காட்டினார். இறுதியில் வாக்குவாதம் சண்டையில் முடிந்தது. இந்த விஷயம் நாயகத்திற்கு எட்டவே, அவர் இருவரையும் வரவழைத்து கண்டிப்பு செய்தார். அப்போது அவர், ‘நான் இறைவனின் அடிமை. பள்ளி சென்று படித்ததில்லை, நான் ஒரு அனாதை’ என்று கூறிக்கொண்டார்.