மேனியெங்கும் வியர்க்கும் சிக்கல் சிங்கார வேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா; தங்க மஞ்சத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 11:11
நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான், முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் தங்க மஞ்சத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 17ம் தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்வான அன்னை பராசக்தியிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அப்போது முருகப்பெருமானுக்கு மானிடருக்கு வியர்ப்பது போன்று திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடக்கும். 18ம் தேதி சிங்கார வேலர் தங்க ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.