முருகன் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற சோலைமலையில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 12:11
அழகர்கோவில்; அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை உற்சவர், மூலவர் சுவாமிக்கும் காப்பு கட்டுதல் நடந்தது. பின் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். காலை சஷ்டி மண்டப வளாகத்தில் சண்முகார்ச்சனை, மஹா அபிஷேகம் நடந்தது. சுவாமி அன்ன வாகனத்தில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார். இன்று காலை 11:00 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக "சூரசம்ஹார விழா" நவ.,18 அன்று நடை பெறும். நவ.,19, காலை 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை , மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறும்.