பதிவு செய்த நாள்
18
நவ
2023
11:11
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆலயத்தில் இலவச தரிசனம், ரூ.20, ரூ.100 என தரிசன கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ.100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ.500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடவுளை தரிசிக்க கட்டணம் என்பது சம நீதிக்கு மாறான ஏற்பாடா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு. காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
https://www.youtube.com/watch?v=dN8ENB-qwYs