முத்துமாரியம்மன் அவதரித்த தினம்; 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2023 03:11
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் அவதரித்த தினமான கார்த்திகை 5ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் அடிப்படையில் இன்று ஓம் சஷ்டி சேவா சார்பில் பால்குட விழா நடந்தது. இதில், பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்துக் கொண்டு, முத்தாளம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கல்லுக்கட்டி, செக்காலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், செயல் அலுவலர் மகேந்திர பூபதி, கணக்கர் அழகு பாண்டி செய்திருந்தனர்