பதிவு செய்த நாள்
22
நவ
2023
05:11
சின்னதடாகம்: கோவை தடாகம் ரோடு, சோமையனூர், திருவள்ளுவர் நகரில் உள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் சத்ய சாய்பாபாவின், 98 வது ஜெயந்தி விழா நேற்று துவங்கியது.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியில், நேற்று காலை, 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆசார்யா வர்ணம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை,7:00 மணிக்கு கடம் இசை நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு மங்கள ஆரத்தி நடந்தது. இன்று காலை, 7:30 மணிக்கு வித்யா ஹோமம், வாராகி ஹோமம், ராஜ மாதங்கி ஹோமம், தீபாதாரணை நடந்தது. மாலை, 7:00 மணிக்கு மாயாஜால நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடக்கிறது. நாளை வியாழக்கிழமை காலை, 7:30 மணிக்கு கணபதி பூஜை, தம்பதி பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை சாய் பஜன் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு சத்ய சாய்பாபாவின் ஊஞ்சல் உற்சவம், வான வேடிக்கை, சுவாமி திருவுருவ படத்துடன் ஊர்வலம், அன்னதானம் நடக்கிறது.