Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் ஏகாதசி உற்சவம்: கேசவன் ... சத்ய சாய்பாபாவின் 98வது ஜெயந்தி விழா சத்ய சாய்பாபாவின் 98வது ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்
எழுத்தின் அளவு:
விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்

பதிவு செய்த நாள்

22 நவ
2023
05:11

திருப்பரங்குன்றம்: தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் மெகா சைஸ் களிமண் அகல் விளக்குகள் தயாராகின்றன. இவர்கள் 25 ஆண்டுகளாக இந்த மெகா களிமண் அகல் விளக்குகள் தயாரிக்கின்றனர்.

விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகித ஸ்கூல், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்றார் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள், சுவாமி சிலைகள், அகல் விளக்குகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தற்போது களிமண்ணால் ஒரு இன்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக இரண்டு அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப்படுகிறது. சாம்பசிவம் கூறுகையில்: பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 30 ஆண்டுகளாக இந்த பெரிய அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பகுதியில் களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. இந்த விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3,000 விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்கு தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணி கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar