அஞ்சுகிராமம், மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மடத்தில் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா கோலாகலமாக நடை பெற்றது.
சூரசம்ஹார விழாவில் நிறைவு நாளான நேற்று பிற்பகல் 3 மணிக்கு மருங்கூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து வெள்ளி குதிரையில் மயிலாடி ஆராட்டு விழாவிற்கு எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பரமசூரனை வதம் செய்து கோபத்தில் இருக்கும் சுவாமியின் கோபம் தனிய தீர்த்தவாரி மடத்தில் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று. ஆற்றில் இறங்கி ஆராட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. அதன்பிறகு சர்வ அலங்காரத்துடன் வெள்ளி குதிரையில் மயிலாடி வீதிகள் வழியாக மக்களுக்கு ஆசி வழங்கி மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு சென்றார். வழி நெடுகிழும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.