11 நாள் கிரிவலம் செல்லலாம்!; கார்த்திகை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2023 09:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மஹா தீபம் ஏற்றப்படுகிறது. அதேசமயம் கார்த்திகை மாத பவுர்ணமி திதி, நாளை மதியம், 3:58 மணி முதல், மறுநாள் மதியம், 3:08 மணி வரை உள்ளது. இந்த நேரமே கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மஹா தீபம், பவுர்ணமி ஒரே நாளில் வருவதால், வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். மஹா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பதால், 11 நாளில் ஏதாவது ஒரு நாளில் கிரிவலம் செல்லலாம் என்றும், ஆன்மிக சான்றோர் தெரிவித்தனர்.