பதிவு செய்த நாள்
28
நவ
2023
08:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல், பக்தர்கள் பாதியிலேயே கோவிலில் இருந்து வெளியேறினர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த தீப திருவிழாவில், நேற்று முன்தினம் மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், இதனால், நேற்று முன்தினம் மஹா தீபம் காண முடியாத வெளியூர் பக்தர்கள், மஹா தீபம் எரியும், 11 நாட்களில், ஏதாவது ஒரு நாளில் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து வழிபடுவர். அவ்வாறு நேற்று, கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால், 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், பெண் பக்தர்கள் பெரும்பாலோனோர் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல் பாதியிலேயே, அவசர கால வழியாக கோவிலிருந்து வெளியேறினர்.