பாலக்காடு; கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.
கேரள மாநிலம் பாலக்காடு பிராயிரியில் உள்ளது கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் கார்த்திகை மாதம் ஆறாட்டு உற்சவம் நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. காலை 8 மணிக்கு அம்மனுக்கு ஆறாட்டு நடந்தது, தொடர்ந்து பிரஹ்மகலசாபிஷேகம், 10.30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் காழ்ச்சீவேலி நடைபெற்றன. 11.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலை 5 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் பகவதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6.15 மணிக்கு அம்மனுக்கு நிறமாலை, சந்தனக்காப்பு ஆகிய பூஜைகள் நடந்தன. தொடந்து கோவில் சுற்று விளக்கேற்றி பக்தர்கள் வழிபடும் நிகழ்வு நடந்தன. 6.30க்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. 6.45க்கு கோவில் நடை முன் ஆசா சுரேஷ் சோபான சங்கீத அர்ச்சனை நடத்தின. இரவு 9.30 மணிக்கு கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையிலான பாண்டி மேளம் முழங்க யானைகளின் அணிவகுப்பு நடந்தன. தொடர்ந்து நடந்த அத்தாழபூஜையுடன் உற்சவம் நிறைவுபெற்றது.