மயிலாடுதுறையில் மூலவர் சிவலிங்கத்தில் இருந்து வரும் தண்ணீர்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2023 02:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மடப்புரம் ஊராட்சியில் உள்ள மண்மலை கிராமத்தில் மங்கல நாயகி சமேத மண்மலை நாதர் கோவில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சிறிய கோவில் அமைத்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமியை பார்த்தபோது சுவாமியின் சிலை மீது தண்ணீர் வடிந்தது. அதனை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து சிவலிங்கத்தை வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீர் வடிந்து வருவது பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. சிவலிங்கத்தில் தண்ணீர் வடியும் நிகழ்வு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.