திருவண்ணாமலையில் இன்று குபேர கிரிவலம் ; கிரிவலம் சென்று வழிபட செல்வம் பெருகும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2023 08:12
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று, குபேர கிரிவலம் நடக்க உள்ளது. திருவண்ணாமலையில் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். இதில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில், குபேர பெருமான் கிரிவலம் செல்கிறார். இந்த நாளில் கிரிவலம் சென்றால், குபேர பெருமான் ஆசி கிடைத்து, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று (11ம் தேதி) குபேர கிரிவல நாளாகும். இதனால் கிரிவலப்பாதையில், ஏழாவதாக உள்ள குபேர லிங்கத்திற்கு, இன்று மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்படும். இங்கு வழிபாடு நடத்திவிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.