கள்ளழகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2023 08:12
அழகர்கோவில் : கார்த்திகை கடைசி ஞாயிறு மற்றும் வார விடுமுறை நாளான நேற்று, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை. இதையொட்டி நேற்று கள்ளழகர், சோலைமலை முருகன், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில்களில் ஐயப்ப, முருக பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகாலை முதல் குவியத் தொடங்கினர். மலைக்கு வந்தவர்கள் ராக்காயி அம்மன் கோயில் புனித நுாபுரங்கையில் நீராடினர். கள்ளழகர் மூலவர் சன்னதிக்கு செல்ல ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இரவு தங்குவதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்திருப்பதால் எந்நேரமும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், வாகனங்கள் நிறுத்தம், கழிப்பறை வசதிகள், பாதுகாவலுக்கு பணியாளர்கள் என ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.