வாடிப்பட்டி; சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணபுரத்தில் பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மாத வழிபாடு நடந்தது. கார்த்திகை முதல் வாரத்தில் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர். கடைசி வாரத்தை முன்னிட்டு நேற்று கோயில் முன் யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவர், சிவன் பார்வதி, விநாயகர், முருகர், சிலைகளுக்கு பல்வகை அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார ரதத்தில் எழுந்தருளிய சுவாமி கிராம வீதிகளில் வலம் வந்து சித்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை இல்லத்து பிள்ளைமார் சங்கத்தினர் செய்திருந்தனர்.