அன்னூர்; அன்னூர் மற்றும் கோவில்பாளையம் கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னூர் மாரியம்மன் கோவிலில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அதே வளாகத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பழமையான ஓதிமலை ரோட்டில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், அம்மன் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். குலதெய்வத்தினர் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்பாளையத்தில் வீரமாட்சி அம்மன் கோவில், கவைய காளியம்மன் கோவில் மற்றும் குரும்பபாளையத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.