மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு பக்தர் கூட்டம் அலைமோதியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை அமாவாசையான நேற்று அதிகாலை 4.30 மணியில் இருந்தே அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்கார பூஜை நடந்தது. இரவு 8.30 மணியுடன் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றன. இந்த பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பக்தியுடன் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்தி கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு தரிசனம் செல்லும் வழி, சாதாரண வழி என அனைத்திலும் பக்தர்கள் கால்கடுக்க காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.