தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் இன்று (20ம் தேதி) மகா இசை விழா நடக்கிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் ஆண்டு தோறும் நாதஸ்வர மேள இசைக்கலைஞர்கள் நவராத்திரி மகா இசை விழா நடத்தி வருகின்றனர். இன்று (20ம் தேதி) மாலையில் 9ம் ஆண்டு நவராத்திரி மகா இசை விழா நடக்கிறது. இஞ்சிகுடி சுப்பிரமணியன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. நாதஸ்வர கலைஞர்கள் இசைச்செல்வன், செண்பகராமன், மல்லிகா, விஜயா, குமார், தம்பிராஜ், மாரியப்பன், இசக்கியப்பா, தவில் கலைஞர்கள் பொன்னம்பலம், ராஜேந்திரன், ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.