கோல்கட்டா: துர்கா பூஜையை கவுரவிக்கும் விதமாக துர்கா பூஜைக்கு உலக விருது வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மக்களிடம் இதற்கான ஓட்டு பதிவு நடத்தப்பட உள்ளது. இதற்காக துர்கா பூஜை படங்கள் மற்றும் வீடியோ ஆகியன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வங்காளம் முதல் பிர்மின்ஹம் நகரம் வரை உள்ள அனைத்து மக்களிடமும் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. உலகில் சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜை குறித்த போட்டியும் உலக அளவில் நடத்தப்பட உள்ளது. www.largedurgapujo.com மற்றும் facebook.com/largedurgapujo.com ஆகிய இணையதளங்களில் மக்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்யலாம். பூஜை கமிட்டி சார்பில் ஓட்டெடுப்பு குறித்த அனைத்து தகவல்களும் இந்த இணையதளங்களில் தரப்பட்டுள்ளது. அக்டோபர் 24க்கு முன் துர்கா பூஜை குறித்த விபரங்கள், தகவல்கள், படங்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவைகள் வெளியிடப்பட உள்ளன. பழங்கால பாரம்பரிய முறையிலான பூஜை, சிலைகளுக்கான சிறந்த அலங்காரம், சமூக அமைப்பு மாதிரி மற்றும் சிறந்த கருத்து ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.