பதிவு செய்த நாள்
20
டிச
2023
09:12
இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு பிரவேசிக்கிறார்
சனி பகவான். 2026 மார்ச் 6வரை கும்ப ராசியில் தங்கியிருப்பார்.
நவக்கிரகங்களில்
தொழில் கிரகமாக இருக்கும் சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 2023 டிச.20
(சோபகிருது வருடம் மார்கழி 4) புதன்கிழமையன்று மகர ராசி அவிட்ட
நட்சத்திரம் 2ம் பாதத்தில் இருந்து கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம்
பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2026 மார்ச் 6வரை கும்ப ராசியில்
தங்கியிருப்பார்.
நன்மை பெறும் ராசி: மேஷம், கன்னி, தனுசு
நன்மை, தீமை பெறும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், துலாம்
பரிகார ராசிகள்: கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்
எந்த ராசிக்கு என்ன சனி?
ராசி சனியின் பெயர் பலன்கள்
மேஷம் லாபச்சனி முயற்சிக்குப் பின் லாபம், நன்மை
ரிஷபம் ஜீவனச்சனி தொழிலில் முன்னேற்றம், பிரயாணம்
மிதுனம் பாக்கிய சனி தந்தையுடன் கருத்து மோதல், பணப்பிரச்னை
கடகம் அஷ்டம சனி அனைத்திலும் கவனம் தேவை
சிம்மம் கண்டக சனி வாகனப் பயணத்தில் கவனம் - வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம்
கன்னி ரண ருண சனி வெற்றி, உடல்நலனில் கவனம்
துலாம் பஞ்சம சனி குழந்தைகளுடன் வாக்குவாதம்
விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி வீடு, மனை, வாகனத்தில் பிரச்னை
தனுசு தைரிய வீர்ய சனி தைரியம், மதிநுட்பம் வெளிப்படும்
மகரம் வாக்கு சனி அலைச்சல், பேச்சில் கவனம் தேவை
கும்பம் ஜென்மச்சனி அனைத்திலும் கவனம் தேவை
மீனம் விரயச் சனி வீண் விரயம் ஏற்படும்
சனி ஸ்லோகம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
கண்
மை போல கருநிறம் கொண்டவரே! சூரியனின் மைந்தரே! எமதர்மனின் சகோதரனே!
சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவரே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவரே!
சனிபகவானே! உம்மைப் போற்றுகிறேன்.