பிரமாண்ட அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சோனியாவிற்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2023 09:12
புதுடில்லி: காங்., தலைவர் சார்பாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் சோனியா பங்கேற்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
உ..பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.. அடுத்தாண்டு (2024) ஜன., 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு காங்., மூத்த தலைவர்கள் சோனியா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பாக காங்., மூத்த தலைவர் திக்விஜய், கே.சி. வேணுகோபால் ஆகியோர் கூறுகையில், சோனியாவிற்கு அழைப்புவிடுத்தமைக்கு நன்றி, கட்சி சார்பில் சோனியா, அல்லது அவரது சார்பில் மூத்த தலைவர் விழாவில் பங்கேற்பார் என்றார்.