தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 10:12
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பால் , சந்தனம், திரவிய பொடி என பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு, அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.