ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் நடப்பதை போன்று விசேஷ சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த டிச.,18 அன்று காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை பூதபலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வருகிறது. இன்று மாலை 4:30 மணியளவில் வல்லபை ஐயப்பன் கோயிலில் இருந்து ரெகுநாதபுரம் வரை உற்ஸவர் ஐயப்பன் வில், அம்புடன் பள்ளி வேட்டை புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சயன திருக்கோலமும் நடந்தது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு கோபூஜை, காலை 8:00 மணிக்கு பேட்டை துள்ளல், ஆராட்டு, புறப்பாடு பஸ்மக்குளத்தில் ஆராட்டு, கொடி இறக்கம், மகா அபிஷேகம் உள்ளிட்டவைகளும் நடக்க உள்ளது. பூஜைகளை கோயில் தலைமை குருசாமி மோகன் மற்றும் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.