பதிவு செய்த நாள்
27
டிச
2023
05:12
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
சிவபெருமானுக்கு நடக்கும் விசேஷங்களில் ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடந்தது. இதே போல் செஞ்சி பீரங்கிமேடு அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா செஞ்சி திருமுறை கழகம் சார்பில் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு மூலவர் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜலாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு கஸ்துாரி மஞ்சள், விபூதி, சந்தனம், பன்னீர், வெட்டிவேர், ஜவ்வாது, பால், தேன், இளநீர் உட்பட ஏராளமான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். காலை 9 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்து. ஏராளமான பெண்கள் திருவாசக பாடல்களை பாடி சிவனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. திருமுறை கழகத்தினர், அருணாச்சல ஈஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.