பதிவு செய்த நாள்
27
டிச
2023
10:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 18ல் சபாபதி சன்னதியில் உள்ள நடராஜர் சுவாமிக்கு காப்பு கட்டி ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. அன்று முதல் டிச.,26 வரை கோயில் 3ம் பிரகாரத்தில் மாணிக்கவாசகர் வலம் வந்து, நடராஜர் சுவாமி திருவெம்பாவை பாடல் படும் நிகழ்வை கோயில் குருக்கள் செய்தனர். இன்று அதிகாலை 3:40 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு பால், பஞ்சமிர்தம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட நவதானியத்தில் அபிஷேகமும், பூஜையும் நடந்தது. இதனை தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு மாணிக்கவாசகர் பல்லாக்கில் புறப்பாடாகி நடராஜர் முன்பு எழுந்தருளி திருவெம்பாவை பாடல் பாடும் நிகழ்ச்சி நடந்ததும், 7 திரைகள் விலகியதும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் காட்சியளித்தார். பின் நடராஜருக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், மேலாளர் மாரியப்பன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, பஞ்சமூர்த்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின் மதியம் 12:20 மணிக்கு நடராஜர், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.