ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2024 01:01
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு தினமும் திருஷ்டி கழிக்கப்படுகிறது. ரங்கனின் அழகைக் கண்டால் யார்தான் திருஷ்டி போட மாட்டார்கள்? இறைவனை திருஷ்டியெல்லாம் அண்டாது என்றாலும் கூட, அன்பின் காரணமாக இச்சடங்கு செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு, ஐந்தாவது பிரகாரத்திலுள்ள நாலுகால் மண்டபத்தில் சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி நடத்தப்பட்டது. ஒரு சிறிய குடத்தின் மேல் கனமான திரியிட்டுத் தீபமேற்றிப் பெருமாளுக்குக் ஆரத்தி காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.