திருமுருகன்பூண்டியில் பொங்கல் விழா; மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2024 03:01
அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன், மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மா பாளையத்தில் விநாயகர், காமாட்சியம்மன், மாகாளி அம்மன், கருப்பராயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து 31ம் தேதி பொட்டு சாமி பொங்கல், ஜனவரி 1ம் தேதி விநாயகர் பெருமானுக்கு பொங்கல் மற்றும் காமாட்சியம்மன், மாகாளியம்மனுக்கு படைக்கலம், அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்தனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் விழா குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.