அவிநாசி, கரையப்பாளையம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2024 03:01
அவிநாசி; அவிநாசி அருகே கரையப்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரையப்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 27ம் தேதி கோவில் வளாகத்தில் பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு கொடியேற்றுதல், சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று குண்டம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் அழைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின்னர், ஆலங்காட்டுபாளையம் சித்தி விநாயகர் கோவிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து மாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அதனை தொடர்ந்து அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மஞ்சள் நீராட்டுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.