வீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் ரூ.25 லட்சம் மதிப்பிலான தேர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2012 10:10
திருக்கோவிலூர்: வீரட்டானேஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பின்றி வீணாகிறது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு தேர் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக நீடித்து வந்தது. மலேசியாவை சேர்ந்த பக்தர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேரை செய்து கொடுத்தார். இரண்டாவது ஆண்டு பிரம்மோத்சவ விழா தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில் மழை, வெயில் இவைகளை தாங்கி, திறந்த வெளியிலில் தேர் நின்று கொண்டிருக்கிறது. அறநிலையத்துறை சார்பில் தேர் நிறுத்துவதற்கான கூடாரம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஷெட் அமைப்பதற்கான நிதியை இந்துசமய அறநிலையத்துறை ஒதுக்கியது. இதற்கான டெண்டர் அறிவிப்பும் வெளியானது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகை போதாது என்பதால் டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. தொகையை அதிகப்படுத்தி ஷெட் அமைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.