சிறுபாக்கம்:சிறுபாக்கம் வள்ளலார் தர்ம சாலையில் கொடி நாளையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சிறுபாக்கம் கூட்டுரோட்டிலுள்ள வள்ளலார் தர்மசாலையில் ஆண்டு தோறும் ஐப்பசி 7ம் தேதி கொடி நாள் கொண்டாடுவது வழக்கம். ஐப்பசி 7ம் தேதியையொட்டி நேற்று அதிகாலை கொடியேற்று விழா, வள்ளலாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி முத்து தலைமை தாங்கினார். சுப்ரமணியன், ராமலிங்கம், மணி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வேலாயுதம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செந்தாமரைகண்ணன், பெரியசாமி, குழந்தைவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.