தேய்பிறை அஷ்டமி; கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.. தேங்காய், பூசணியில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2024 10:01
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்திவைத்தார். பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய், நீர் பூசணிக்காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.