பதிவு செய்த நாள்
08
ஜன
2024
04:01
அன்னூர்; அயோத்தி கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை அன்னூர் காலனி பகுதியில் மத்திய அமைச்சர் வீடு வீடாகச் சென்று வழங்கினார்.
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து வீடுகளுக்கும், அழைப்பிதழும், அட்சத்தையும், ராமர் படமும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மீன்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் இன்று அன்னூர் அருகே குமாரபாளையம் காலனியில் அழைப்பிதழ் வழங்கினார். காலனி பகுதியில் வீடு, வீடாகச் சென்று, ஸ்ரீ ராமர் படம், அட்சதை மற்றும் அழைப்பிதழை வழங்கி அயோத்திக்கு வர அழைப்பு விடுத்தார். கும்பாபிஷேக நாளன்று தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாடும்படி கூறினார். 500 ஆண்டுகால அயோத்தி ராமர் கோவில் குறித்த கனவு மோடி ஆட்சியில் நனவாகியுள்ளது, என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி, ரத்தினசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.