பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜையையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் அம்மன் லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.