பதிவு செய்த நாள்
24
அக்
2012
11:10
கோபிசெட்டிபாளையம்: கோபி வட்டம், வெள்ளாங்கோவில், ஸ்ரீபல்லி மாரியம்மன் கோவில் திருவிழா, அக்டோபர் 31 மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதியில் நடக்க உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, புரட்டாசி, 30ம் தேதி, பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. ஐப்பசி, 14ம் தேதி, இரவு, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், திருவீதி உலா நடக்கிறது. ஐப்பசி, 15ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பொங்கல், தண்டனிடுதல் மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், ஐப்பசி, 16ம் தேதி இரவு, 8 மணிக்குள் மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது. ஐப்பசி, 17ம் தேதி பகல், 12 மணிக்கு, மறுபூஜையுடன் விழா நிறைவுபெறும் என, விழாக்குழு ஏற்பாட்டாளர்கள் துரைசாமி, செங்கோட்டையன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.