Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் ... வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி யாக பூஜை வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம வரதாஹினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா; அயோத்தி அட்சதை வழங்கி பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
ராம வரதாஹினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா; அயோத்தி அட்சதை வழங்கி பக்தர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

12 ஜன
2024
08:01

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராம வரதாஹினி மடத்தில் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சை யாக நடைபெற்றது.  அனுமன் ஜெயந்தியை யொட்டி மடத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் ஆஞ்சநேய சுவாமி மூலமந்திர ஹோமம், சதுர்வேத சமர்ப்பணம் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மூலமந்திர ஹோமம் பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு  செய்யப்பட்டுகோயிலை வலம் வந்து ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.  இதனை அடுத்து சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள், கோ பூஜை, அசுவ பூஜை, ஒட்டகத்திற்கு சௌந்தர்யா பூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். சிறந்த தவில் வித்வான் பன்னீர்செல்வம், நாதஸ்வர வித்வான் பாலமுருகன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து அயோத்தி ராம ஜெம்ம பூமியில் 22ம் தேதி ராமர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி பக்தர்களுக்கு ராமர் கோயில் படம், அட்சதை பிரசாதங்களை வழங்கினார். இதில் சாம்பசிவம் கோயில் நிர்வாகிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி  விழா ஏற்பாடுகளை  சாய் விக்னேஷ் செய்திருந்தார். இதேபோல் பிரசித்திபெற்ற மயிலாடுதுறை ரயிலடி ஆஞ்சநேயர் கோயில், திருவிழந்தூர் ஆஞ்சநேயர் கோயில், ஆனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில், சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar