அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா; ஜனாதிபதிக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2024 11:01
புதுடில்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷே க விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 22ல் நடக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ராமர் கோயில் கட்டுமான மேற்பார்வை கமிட்டி தலைவர் நிர்பிநே்திர மிஸ்ரா, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயற்குழு தலைவர் அலோக் குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராம்லால் ஆகியோர் ராஷ்டிராபதி பவன் சென்று அழைப்பிதழை ஜனாதிபதியிடம் வழங்கினர்.