பதிவு செய்த நாள்
13
ஜன
2024
09:01
சூலூர்; சூலூர் வட்டாரத்தில், 60 ஆயிரம் பேருக்கு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில், குழந்தை ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு. வரும், 22 ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை மற்றும் கோவில் படம், கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று , ஹிந்து இயக்கத்தினர் கொடுத்து வருகின்றனர். சூலூர் வட்டாரத்தில், 60 ஆயிரம் பேருக்கு, அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி, கடந்த, ஜன., 1 ல் துவங்கியது. சூலூர், காங்கயம் பாளையம், மயிலம் பட்டி, சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், ஹிந்து இயக்கத்தினர் வீடு வீடாக சென்று அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர். மேலும், ஜன., 22 ம்தேதி மதியம், 12:00 மணிக்கு வீடுகள்,கோவில்களில் ராம நாம ஜபம் செய்யவும், அன்று மாலை, வீட்டு வாசல்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றவும் ஹிந்து இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்.