தைப்பூச தெப்ப தேர் : ஜன., 25ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2024 11:01
ராமேஸ்வரம்: தைப்பூச தெப்ப தேரோட்டத்தை முன்னிட்டு ஜன., 25ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை பகலில் சாத்தப்படும்.
ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயில் தீர்த்த குளத்தில் ஜன., 24ல் பிள்ளையார் தெப்பம் நடக்க உள்ளது. மறுநாள் (ஜன., 25ல்) தைப்பூச தெப்ப தேரோட்டத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் காலை 10 மணிக்கு புறப்பாடாகி லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வர். பின் அன்று மாலை 6 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரணனை முடிந்ததும், தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், குளத்தை வலம் வந்து தைப்பூச தெப்ப தேரோட்டம் நடக்கும். இதன்பின் இரவு 10 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்புவார்கள். இதனால் அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.