Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று அஷ்டமி; துன்பம் இல்லா ... ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோவில்.. ஜொலிக்கிறது! ரூ.800 கோடியில் ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோவில்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் நாளை பிரதமர் மோடி தரிசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் நாளை பிரதமர் மோடி தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2024
10:01

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க, சென்னைக்கு நாளை மாலை வருகிறார். அன்று இரவு, சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்கும் மோடி, அடுத்த நாள் திருச்சி ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, 12ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனித தலங்களாக திகழ்கின்றன. எனவே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார். அவர், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க நாளை மாலை சென்னை வருகிறார். இரவு, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். அவர், மறுநாள் காலை, 8:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார். காலை 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னிதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். அவர், ராமேஸ்வரத்தில் உள்ள, 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். அன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். வரும், 21ம் தேதி காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் மோடி, சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பின், கலசத்தில் சேகரித்த, 22 புனித தீர்த்தத்தை எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் திருச்சி போலீஸ் உயர் அதிகாரிகள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பிரதமர் செல்லும் வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

நாளை மாலை 5:00 மணிக்கு சென்னை வருகை. இரவு சென்னையில் தங்குகிறார்.
ஜன., 20ம் தேதி காலை விமானம் வாயிலாக திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில்.
மதியம் 12:55 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக ராமேஸ்வரம். ஜன.,21 காலை, 11:20 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக மதுரை விமான நிலையம். மதியம் 12:25 மணிக்கு டில்லி புறப்பாடு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, தொம்பரம்பேடு கிராமம், செஞ்சுலட்சுமி நகரில், பக்தர்கள் பங்களிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar