Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம ராஜ்யத்தை அடிப்படையாக கொண்டதே ... அயோத்தி பக்தர்களுக்கு 100000 திருப்பதி லட்டு; திருமலையில் பணிகள் தீவிரம் அயோத்தி பக்தர்களுக்கு 100000 திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் காளி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த 10 ஆயிரம் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மடப்புரம் காளி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த 10 ஆயிரம் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜன
2024
03:01

திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக ஒரே சமயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்ததால் நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம் வீரசோழன் , மினாக்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மடப்புரம் காளி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கம், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பறவை காவடி, வேல் குத்தி அக்னிசட்டி,பால்குடம் ஏந்தி வந்தனர். பாதயாத்திரை குழு தலைவர் கருப்புச்சாமி கூறுகையில் :

விவசாயம் செழிக்க வேண்டியும் உடல்நலம் வேண்டியும் தை 2ம் தேதி பாதயாத்திரையாக கிளம்பி தை 3ம் தேதி மடப்புரம் காளி கோயிலுக்கு வருவது வழக்கம், ஆரம்பத்தில் ஒருசிலர் மட்டுமே வந்த நிலையில் தற்போது ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளனர். வீரசோழன் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றில் பொருட்களை ஏற்றி கொண்டு பாதயாத்திரையாக வந்துள்ளோம், என்றார். பாதயாத்திரையாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதாக வந்த தகவலையடுத்து கோயிலுனுள் பக்தர்களை முறைப்படி வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து சென்றனர். கோயில் வாசலில் பறவை காவடி, அலகு குத்தி வந்தவர்கள் சாமியாட்டம் ஆடியதால் சற்று நெரிசல் ஏற்பட்டது. ஒரே சமயத்தில் மடப்புரம் ரோட்டில் பக்தர்கள் வரிசையாக ஆடிப்பாடி, அலகு ஏந்தி வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனாதி, தேளி, கணக்கன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திருப்புவனம், மதுரை செல்ல முயன்றவர்கள் பலரும் நெரிசலில் சிக்கி தவித்தனர். ஒருசில போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்ததால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர். செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar