நீங்கள் சொல்லும் இரண்டுமே உண்மையே. துஷ்ட நிக்ரஹம் சிஷ்டபரிபாலனம் என்ற இரண்டையும் கடவுள் செய்து கொண்டிருக்கிறார். கம்சன், இரண்யன், ராவணன் போன்ற அசுரர்களை அழித்தார். பிரகலாதன், துருவன், விபீஷணன், திரவுபதி, குகன் போன்ற பக்தர்களைக் காத்து, உலக மக்களுக்கு முன்மாதிரியாக அளித்தார்.