கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜை; பட்டாபிஷேகம் அலங்காரத்தில் ராமர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 04:01
பெரியகுளம்; ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் கோயிலில் சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது.
பெரியகுளம் வடகரை கோதண்ட ராமர் கோயிலில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பட்டாபிஷேகம் அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை அர்ச்சகர் கோவிந்தராஜ் செய்தார்.
பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்தார். எண்டப்புளி பகுதி முத்தாலம்மன் கோயிலில் ராமர் படம் வைத்து பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. ராமபிரான் அவதாரம் குறித்து லோக்சபா பா.ஜ., அமைப்பாளர் ராஜபாண்டியன் பக்தர்களிடம் பேசினார். பெரியகுளம் பாதாள காளியம்மன் கோயிலில் ராமர் படத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் ஜெயபாண்டியன் பூஜை நடத்தி, தீபாராதனை காட்டினார். பக்தர்கள் பங்கேற்றனர்.