Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்; ... ஏழு திரைகள் நீக்கி வடலூரில் 153 வது தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவசம் ஏழு திரைகள் நீக்கி வடலூரில் 153 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று தைப்பூசம்; முருகனை வணங்குவோம்! நலம் பல பெறுவோம்!
எழுத்தின் அளவு:
இன்று தைப்பூசம்; முருகனை வணங்குவோம்! நலம் பல பெறுவோம்!

பதிவு செய்த நாள்

25 ஜன
2024
07:01

பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. தைப்பூசம் சிவசக்தி, முருகனுக்குரிய சிறப்பான நாள். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் வெகுவிசேஷம். தைப்பூசத்தன்று நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும். இன்று முருகனை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

இந்த நாள் நல்ல நாள்; கடக ராசியைச் சேர்ந்தது பூச நட்சத்திரம். இதன் அதிபதி சந்திரன். தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் இருப்பார். இந்த நாளில் சூரியனும், சந்திரனும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். தை பவுர்ணமியன்று, பூச நட்சத்திரத்தின் போது இப்பார்வைக்கு ஆற்றல் அதிகம். சிவபெருமானின் அம்சம் சூரியன்; அம்பிகையின் அம்சம் சந்திரன். இந்த நல்ல நாளில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.


பழநியில் இரண்டு கோயில்முருகனின் ஆறு படைவீடுகள் - திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை. இதில் மூன்றாம் படைவீடான பழநியில் மட்டும் இரண்டு கோயில்கள் உள்ளன. அடிவாரத்திலுள்ள கோயில் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். இதுவே முதல் கோயிலான குழந்தை வேலாயுதர் கோயில். மலையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

செவ்வாய் தோஷம் தீர... செவ்வாய்க்குரிய தலமான பழநியில் உள்ள முருகன் சன்னதி மேற்கு நோக்கி உள்ளதால் அதற்கு சக்தி அதிகம். இங்கு 42 துாண்கள் கொண்ட பாரவேல் மண்டபம் உள்ளது. சுக்கிரனின் எண் 6. இதைக் குறிக்கும் வகையில் துாண்களின் கூட்டுத்தொகை 4+2 = 6. பாரவேல் மண்டபத்தில் சுக்கிர ேஹாரை அல்லது வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும். செல்வம் சேரும். செவ்வாய் தோஷம் விலகி திருமணம் கைகூடும்.


இழந்ததை மீட்க...முருகனுக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமையன்று விரதமிருப்பதற்கு கந்த சுக்கிர வார விரதம் என்று பெயர். இந்நாளில் முருகனை வழிபட்டால் மனநலம், உடல்நலம், செல்வம் பெருகும். அன்று காலையில் சாப்பிடக் கூடாது. மதியம் ஒருவேளை உணவும், இரவில் பால், பழம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை ஜபிக்கவும். கந்தசஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்தகுரு கவசம் பாடுவது நல்லது. பார்க்கவ முனிவரின் ஆலோசனைப்படி முன்பு பாரத நாட்டை ஆண்ட மன்னரும், ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தவருமான பகீரதன் மூன்றாண்டு விரதமிருந்து இழந்த செல்வத்தை மீட்டார்.

விடியல் எப்போது;

*அதிகாலையில் கூவும் சேவல் போல, எப்போது எனக்கு விடியல் பிறக்கும் என வேண்டுவது சேவல் காவடி.
* குழந்தைக்கு தாய்ப்பால் உணவு. முதுமைக்கு பசுவின் பால் உணவு. இறக்கும் முன் உயிர் துடிக்கும் போதும் பால் ஊற்றுவர். மறைந்த பின் இரண்டாம் நாளன்றும் பாலுாற்றுவர். பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் துணையிரு... முருகா! என வணங்குவதே பால்காவடி.
* துன்பங்களால் ஏற்பட்ட வேதனையை தணியச் செய்வது பன்னீர், சந்தனக்காவடிகள்.
* மனைவி, குழந்தைகள், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாக என்னுடன் உள்ளனர். அவர்களை கரை சேர்ப்பாய் முருகா... என வேண்டுவது புஷ்பக்காவடி.

* கடலில் உள்ள மீன் போலவும், கருடனைக் கண்ட பாம்பு போலவும் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்பது மச்ச, சர்ப்பக் காவடிகள்.


கந்தன் என்றால்...

கந்தன் என்றால் பகைவரை பலம் இழக்கச் செய்பவர். பகைவர் என்பது நம் மனமே. தேவையில்லாததை மனம் சிந்திக்கிறது. அதை தடுத்து காப்பவர் கந்தன். கந்து என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி. உயிர்கள் என்னும் யானையை ஆசையில் இருந்து காப்பவன் கந்தன். கந்து என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு என பொருள் உண்டு. கந்தனை பற்றினால் பிணி தீரும்.


பிரச்னை தீர...முருகனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பாம்பன்சுவாமிகள். முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர். இவர் பாடிய சண்முக கவசம் பாடல்கள் நோய் தீர்க்கும் மருந்து. அவரின் இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த போது குதிரைவண்டி மோதியதில் இடதுகால் ஒடிந்தது. 73 வயதில் விபத்து நேர்ந்ததால் நடக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சண்முக கவசம் பாடி முருகனருளால் குணம் அடைந்தார். இதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18ஐ முதல் எழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் சண்முக கவசத்தில் உள்ளன. இதை தினமும் ஆறுமுறை பாடினால் பிரச்னை தீரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar